"தூவானம்" கருப்பாடல் வெளியீடு | தினகரன்

"தூவானம்" கருப்பாடல் வெளியீடு

வசந்தம் தொலைக்காட்சியில்  ஒளிபரப்பாகிவரும் கலை, இலக்கிய சஞ்சிகை நிகழ்ச்சியான தூவானத்தின்  கருப்பாடல்  வெளியீடு அண்மையில் சுயாதீன தொலைக்காட்சி வளாகத்தில்  இடம்பெற்றது.

இன, மத, குலபேதங்களை மறந்து இலங்கையர்களாக நாம் கலை, இலக்கியத்தினூடாக அழகிய நாட்டைக் கட்டியெழுப்புவோம் என்ற தொனிப்பொருளில்  உருவாக்கப்பட்டுள்ள இப்பாடலை திரைப்பட இசையமைப்பாளர் சதீஸ் வர்சன் இசையமைத்து பாடியுள்ளார். பாடல் வரிகளை  திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் பொத்துவில் அஸ்மின் எழுதியுள்ளார்.

இலங்கையின் நான்கு திசைகளும் அழகுற காட்சிப்படுத்தப்பட்டுள்ள இப்பாடலை சங்கர் புஸ்பராஜன் சிறப்பாக செம்மைப்படுத்தியுள்ளார். சிரேஸ்டஅறிவிப்பாளர் கே.நாகபூசணி தொகுத்து வழங்கிவரும் 'தூவானம்' நிகழ்ச்சி  அரச தொலைக்காட்சி விருது விழாவில் நான்கு முறை தேசிய விருதினை பெற்றுள்ளது. ஒரு தசாப்தம் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் தூவானத்தின் கருப்பாடலே 

வசந்தம் தொலைக்காட்சியின் வரலாற்றில் நிகழ்ச்சி ஒன்றுக்காக உருவாக்கப்பட்ட முதல் கருப்பாடல்  என்பதும்  குறிப்பிடத்தக்கது. "இலங்கையின் கலை, இலக்கிய வானம் ஒளிபெற கரம் தரும் தூவானம்" என ஆரம்பிக்கும் பாடலை  பொங்கல் சிறப்பு தூவானம் நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்து வெளியிட்டு வைத்தார் தமிழ் நடிகை நிரஞ்சனி சண்முகராஜா.

படம், தகவல்
பி.எம்.எம்.ஏ.காதர்


Add new comment

Or log in with...