கொரோனா கட்டுப்பாடுகளை மீறுவோருக்குக் கடும் தண்டனை

ஜப்பான் அமைச்சரவை அனுமதி

ஜப்பானில் கொரோனா கட்டுப்பாடுகளை மீறுவோருக்குக் கடுமையான தண்டனை விதிக்கும் சட்டமூலத்திற்கு அந்நாட்டு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

சட்டமூலம் சட்டமாக்கப்பட்டால் கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு அபராதமும் சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சேர மறுத்தால் அவர்களுக்கு ஓராண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடும்.

சட்டமூலம் அடுத்த வார நாடாளுமன்றக் கூட்டத்தில் சட்டமாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளையில் எதிர்க்கட்சியினர் சட்டமூலத்தின் சில அம்சங்களுக்கு ஆட்சேபம் தெரிவிக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் கடுமையான தண்டனைகளை விதிக்கும் மசோதா அமைச்சரவையின் அனுமதி பெற்றுள்ளது.

ஏற்கனவே டோக்கியோ உள்ளிட்ட சில இடங்களில் நெருக்கடி நிலை நடப்பிலுள்ளது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இந்த சட்டமூலத்தின் மூலம், வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் மீறினால் ஒரு வருடம் தண்டனையும் 10 ஆயிரம் டொலர் தண்டமும் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் இதுவரை 92 ஆயிரம் பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். தலைநகர் டோக்கியோவில் நாளாந்தம் 1000க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Add new comment

Or log in with...