கொரோனா நோயாளியை கையாண்ட முறைக்கு எதிர்ப்பு

மங்கோலியா பிரதமர் இராஜினாமா

கொரோனா நோயாளியை கையாண்ட முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து மங்கோலியா நாட்டின் பிரதமர் உக்னா குரேல்சுக் தனது பதவியை இராஜினாமா செய்தார்.

அந்நாட்டில் ஒரு ஆஸ்பத்திரியில் குழந்தை பெற்றெடுத்த பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, அவரை வலுக்கட்டாயமாக தனிமைப்படுத்தும் முகாமுக்கு அனுப்பி வைத்தனர். நடுங்கும் குளிரில் ஆஸ்பத்திரி உடை மட்டும் அணிந்திருந்த அப்பெண்ணை பச்சிளம் குழந்தையுடன் தனிமை முகாமுக்கு அனுப்பிய காட்சி, தொலைக்காட்சி அலைவரிசைகளில் வெளியானது.

இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. தலைநகர் உலான் படோரில் நேற்று முன்தினம் போராட்டங்கள் வெடித்தன. உடனே, துணை பிரதமரும், சுகாதாரத்துறை அமைச்சரும் இராஜினாமா செய்தனர்.

அவர்களை தொடர்ந்து, பிரதமர் உக்னா குரேல்சுக் நேற்றுமுன்தினம் பதவி விலகினார்.


Add new comment

Or log in with...