தனிமைப்படுத்துதலை குறைகூறிய வீராங்கனைக்கு கொரோனா | தினகரன்

தனிமைப்படுத்துதலை குறைகூறிய வீராங்கனைக்கு கொரோனா

அவுஸ்திரேலியாவில் அடுத்த மாதம் நடக்கவிருக்கவிருக்கும் டென்னிஸ் பகிரங்க போட்டியில் கலந்துகொள்ள வந்த வீராங்கனை ஒருவருக்கு கொரோன நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர் ஸ்பெயினைச் சேர்ந்த பவ்லா படோஸா.

அவுஸ்திரேலியாவின் தனிமைப்படுத்தும் விதிகள் பற்றிக் கடுமையாகக் குறைகூறியவர்களில் படோஸாவும் ஒருவர்.

உடல்நலம் சரியில்லாததால் நேற்றுமுன்தினம் மெல்பேபர்னில் பரிசோதனை செய்துகொண்ட அவருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. தனிமைப்படுத்துதல் மிக முக்கியமானது, அதைக் குறைகூறியதற்கு மன்னிக்கவும் என்று 23 வயது படோஸா டுவிட்டர் பதிவு மூலம் வருத்தம் தெரிவித்தார்.

அவுஸ்திரேலிய பகிரங்க டென் னிஸ் போட்டியில் கலந்துகொள்ள வந்த 72 வீரர்களில் இதுவரை 4 பேருக்கு நோய்த்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

போட்டி திட்டமிட்டபடி பெப்ர வரி 8 ஆம் திகதி தொடங்கும் என்று ஏற்பாட்டாளர்கள் நம்பி க்கை தெரிவித்துள்ளனர்.


Add new comment

Or log in with...