கமலின் படத்தை ரீமேக் செய்ய விரும்பும் கார்த்திக் நரேன் | தினகரன்

கமலின் படத்தை ரீமேக் செய்ய விரும்பும் கார்த்திக் நரேன்

கமல் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படத்தை ரீமேக் செய்ய விரும்புவதாக இயக்குனர் கார்த்திக் நரேன் தெரிவித்துள்ளார்.

‘துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். இதையடுத்து அவர் இயக்கிய ‘நரகாசூரன்’ படம் சில காரணங்களால் ரிலீசாகவில்லை. பின்னர் அருண்விஜய் நடித்த ‘மாஃபியா’ படத்தை இயக்கினார். தற்போது தனுஷின் 43-வது படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் இன்ஸ்டாகிராம் வாயிலாக இயக்குனர் கார்த்திக் நரேன் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர், “ஒரு படத்தை ரீமேக் செய்யும் வாய்ப்பு கிடைத்தால் எந்த படத்தை ரீமேக் செய்வீர்கள் என கேட்டிருந்தார்.

கார்த்திக் நரேனின் இன்ஸ்டாகிராம் பதிவு

இதற்கு பதிலளித்த கார்த்திக் நரேன், பாரதிராஜா இயக்கத்தில் கமல் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘சிகப்பு ரோஜாக்கள்’ படத்தை ரீமேக் செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளார்.


Add new comment

Or log in with...