கரைதுறைபற்று பிரதேச சபையில் கண்டன தீர்மானம்

- குருந்தூர்மலை விவகாரம்

குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் கண்டன தீர்மானம் முல்லைத்தீவு கரைதுறைபற்று பிரதேச சபையின் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அங்குள்ள ஆதிஐயனார் சூலம்பிடுங்கி எறியப்பட்டமையும் புத்தர் சிலை வைக்கப்பட்டமை மற்றும் இராணுவத்தினரின் பாதுகாப்புடன் தொல்லியல் திணைக்களத்தினர் அகழ்வாராய்ச்சியில் ஈடுபடுகின்றமையை கண்டித்துள்ளனர்.

முல்லைத்தீவு கரைதுறைபற்று பிரதேச சபையின் அமர்வு நேற்று முன்தினம் இடம் பெற்றது. 33ஆவது அமர்வாகவும் இவ்வாண்டின் 1வது அமர்வாகவும் தவிசாளர் க.தவராசா தலைமையில் இடம்பெற்றது.

இவ் அமர்வில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டமையை கண்டித்து சபையில் பெரும்பான்மை இன உறுப்பினர்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து உறுப்பினர்களும் எழுந்துநின்று இரு நிமிடம் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

முல்லைத்தீவு நகரத்திற்கான குடிநீர் வழங்கலுக்கென நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் வீதிகளில் வடிகால்கள் வெட்டப்பட்டு வீதிகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.இன்றுவரை செப்பனிடப்படாத வீதிகளுக்குசபைத் தீர்மானத்திற்கிணங்க இதுவரை சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை என பிரதேச சபை உறுப்பினர் த.அமலனினால் வினா எழுப்பப்பட்டதுடன் நீண்ட காலமாக சேதமடைந்துள்ள வீதி விளக்குகளை காரணங்கள் கூறாமல் மிக விரைவில் திருத்தம் செய்யும் படியும் சபையில் தெரிவிக்கப்பட்டது.

முல்லைத்தீவு குறூப் நிருபர்


Add new comment

Or log in with...