அரசியலமைப்பை உருவாக்க பாராளுமன்றை அரசியலமைப்பு சபையாக மாற்ற வேண்டும் | தினகரன்

அரசியலமைப்பை உருவாக்க பாராளுமன்றை அரசியலமைப்பு சபையாக மாற்ற வேண்டும்

- லக்‌ஷ்மன் கிரியெல்ல வேண்டுகோள்

அரசியலமைப்பை உருவாக்கும் செயற்பாட்டில் முழு பாராளுமன்றத்தையும் அரசியலமைப்பு சபையாக மாற்ற வேண்டும் என்பதுடன் நாட்டில் 30 சதவீதமாகவுள்ள சிறுபான்மையினரையும் உள்வாங்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

அரசியலமைப்பை உருவாக்க நல்லாட்சியின் வழிமுறையைப் பின்பற்ற வேண்டும். அரசாங்கத்துடன் இருக்கும் சட்டத்தரணிகள் குழு ஒன்று மாத்திரம் அரசியல் அமைப்பு விடயத்தை வரைவுக்குட்படுத்த முடியாது.

சோல்பரி அரசியலமைப்பு வரைவு குழு கூட வட்ட மேசை கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டு சகல இன மக்களையும் அதில் உள்வாங்கியது. ஆனால் சுதந்திரத்திற்கு பின்னர் இரண்டு அரசியலமைப்பு வரைவிலும் சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவம் குறைந்தளவே உள்வாங்கப்பட்டது.

சகல இனப் மற்றும் சகல கட்சிப் பிரதிநிதிகளையும் உள்வாங்கி அவர்களின் பங்கேற்பில் புதிய அரசியலமைப்பு வரைவுசார் ஏற்பாடுகளை தற்போதைய அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். நல்லாட்சி அரசாங்கம்,நாங்கள் முழு பாராளுமன்றத்தையும் அரசியலமைப்பு சபையாக மாற்றினோம். 70 க்கும் மேற்பட்ட கலந்துரையாடல்களில் நான் பங்குபற்றியிருக்கிறேன். 20 குழுக்களை அமைத்தோம். எதிர்க் கட்சியினரையும் உள்வாங்கினோம். 75 நாட்கள் அரசியலமைப்பு சபை கூடியது.


Add new comment

Or log in with...