முன்னாள் ட்ரம்ப் நிர்வாகத்தின் அதிகாரிகள் மீது சீனா தடை | தினகரன்

முன்னாள் ட்ரம்ப் நிர்வாகத்தின் அதிகாரிகள் மீது சீனா தடை

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தைச் சேர்ந்த 28பேர் மீது சீனா தடை விதித்துள்ளது. இதில் அமெரிக்க முன்னாள் இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ மீது தடை விதிக்கப்பட்டுள்ளது.  

அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்று சில மணி நேரங்களிலேயே சீன வெளியுறவு அமைச்சு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  

“சீனாவின் உள்ளக விவகாரங்களில் தலையிட்டு, சீன நலன்களை பாதித்து, சீன மக்கள் மற்றும் சீன–அமெரிக்க உறவுகளை மோசமாக சேதப்படுத்திய முட்டாள்தனமான செயற்பாடுகள் திட்டமிட்டு, முன்னெடுக்கப்பட்டதோடு நிறைவேற்றப்பட்டது” என்று சீன வெளியுறவு அமைச்சு இந்தத் தடை குறித்து தெரிவித்துள்ளது.  

ட்ரம்ப் நிர்வாகத்தின் வர்த்தக ஆலோசகர், தேசிய பாதுகாப்பு ஆலாசகர்கள் மீதும் இதன்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.  

சீனாவின் இந்தத் தடை பலனற்றது மற்றும் இழிவானது என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் தேசிய பாதுகாப்பு சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.  

அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவிக்கு வந்த பின்னர் சீன பொருட்கள் மீது வரி விதித்து வர்த்தகப் போர் ஒன்றைத் தூண்டியது அமெரிக்க மற்றும் சீன உறுவில் பெரும் விரிசலை ஏற்படுத்தியது.


Add new comment

Or log in with...