இலங்கை கிரிக்கெட் வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று | தினகரன்

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று-Sri Lankan Cricketers Chamika Karunaratne-Binura Fernando
சாமிக கருணாரத்ன, பினுர பெனாண்டோ

இலங்கை கிரிக்கெட் அணியைச் சேர்ந்த வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பினுர பெனாண்டோ, சாமிக கருணாரத்ன ஆகியோருக்கே இவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் ரி20 சர்வதேச தொடர்களில் பங்குபற்றும் வீரர்கள் பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாக, இலங்கை கிரிக்கெட் (SLC) தெரிவித்துள்ளது.

அவர்கள் கொழும்பில் 3 தனித்தனி குழுக்களாக பயிற்சி பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட குறித்த இரு வீரர்களும் சிகிச்சைக்கு அனுப்பப்படவுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட கிரிக்கெட் வீரர்களுடன் தொடர்புற்ற ஏனைய கிரிக்கெட் வீரர்களை அடையாளம் காண சுகாதார பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

குழுக்களாக பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டதால், அனைத்து வீரர்களும் குறித்த வீரர்களுடன் நேரடியாக தொடர்புபடவில்லை என SLC சுட்டிக்காட்டியுள்ளது.


Add new comment

Or log in with...