ஒத்திவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நடக்காமல் போகலாம் | தினகரன்

ஒத்திவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நடக்காமல் போகலாம்

கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் இந்தக் கோடைகாலத்தில் நடக்காமல் போகலாம் என்று ஜப்பான் அமைச்சர் தாரோ கோனோ கூறியுள்ளார்.

ஜப்பான் எல்லா விதமான முடிவுகளுக்கும் தயாராக இருக்கவேண்டும் என்றார் அவர். போட்டியைத் திட்டமிட்டபடி நடத்த எல்லா வகையான முயற்சிகளும் எடுக்கப்படும் என்றும் தாரோ தெரிவித்தார்.

தற்போது உலக அளவில் மீண்டும் அதிகரித்து வரும் நோய்த்தொற்றுச் சம்பவங்களால் ஜூலை மாதம் நடக்கவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகள் மீது அனைவரின் கவனமும் திரும்பியிருக்கிறது.

டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதில் ஜப்பானிய மக்களுக்கு இருந்த ஆர்வம் இப்போது குறையத் தொடங்கியுள்ளது.

கடந்த வாரம் ஜப்பானியர்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் சுமார் 77 வீதமானோர் போட்டியை இரத்து செய்ய அல்லது ஒத்திவைக்க விருப்பம் தெரிவித்தனர்.


Add new comment

Or log in with...