முகநூலில் அடிப்படைவாத தகவல்கள்; வர்த்தகரின் வைப்புக் கணக்கில் 7 கோடி ரூபா | தினகரன்

முகநூலில் அடிப்படைவாத தகவல்கள்; வர்த்தகரின் வைப்புக் கணக்கில் 7 கோடி ரூபா

இனங்களுக்கிடையில் நிலவும் நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் குரோத மனப்பான்மையுடன் முகநூலில் பல்வேறு தகவல்களை பதிவேற்றி கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வர்த்தகர் ஒருவரின் வைப்புக் கணக்கில் குறுகிய காலத்திற்குள் 7கோடி ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளதாக விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.  

அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கொழும்பு பிரதம மஜிஸ்திரேட் முஹம்மட் மிஹால் முன்னிலையில் நேற்று விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.  

தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த முஹம்மட் பஷால் நிசார் என்ற பெயருடைய மேற்படி சந்தேக நபர் அடிப்படைவாதத்தை பரப்பி இணையத்தளங்கள் மூலம் பல்வேறு தகவல்களை வெளியிட்டார் என்ற குற்றத்திற்காக கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.  

விசாரணைகளிலிருந்து அவருடைய கணனியையும் கையடக்கத் தொலைபேசியையும் பரிசீலித்துள்ளதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திடம் தெரிவித்தது.  

அடிப்படைவாத நோக்குடன் இனங்களுக்கிடையில் பேதங்களை ஏற்படுத்தும் வகையில் அவர் பிரசாரங்களை மேற்கொண்டிருந்தார் என்ற குற்றத்திற்காக அவர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.(ஸ)  

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...