மடவளை மக்களால் நன்றியுடன் நினைவு கூரப்படும் மர்ஹூம் அப்துல் வஹாப்

மர்ஹும் மொஹம்மது கலீபா அப்துல் வஹாப் (கணக்கப்பிள்ளை ஹாஜியார்) காலமாகி நான்கு வருடங்களாகிறது.16-.06.-1921 அன்று மாத்தளை நிககொல்லையில் பிறந்த இவர் திருமணத்தின் பின்னர் மடவளையில் தனது வாழ்க்கையைத் தொடர்ந்தார்.

சாதாரண வியாபாரியாக விளங்கிய அவர் இளம் வயதிலேயே துடிப்பு, அறிவாற்றல், சமூகப்பற்று கொண்டவராக இருந்தார்.

மர்ஹும் மொஹம்மது கலீபா அப்துல் வஹாப், மடவளை முஸ்லிம் இயக்கம் (தற்போது YMMA), பாடசாலை அபிவிருத்தி சங்கம், மடவளை ஜாமிஉல் கைராத் பள்ளிவாசல், அல் ரஹீமிய்யா அரபுக் கல்லூரி போன்ற பிரதான அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.

தற்போதைய மதீனா தேசிய கல்லூரிக்கான (அன்று மதீனா பாடசாலை) அபிவிருத்தி திட்டங்களுக்கு அவர் பெரும் பங்காற்றினார். இதேவேளை மடவளை ஜாமிஉல் கைராத் ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாகத்திலும் செயலாளர் மற்றும் பொருளாளர் போன்ற முக்கிய பொறுப்புக்களில் பணியாற்றி தனது கடமையாற்றினார்.

1995ம் ஆண்டு மடவளையில் ஸ்தாபிக்கப்பட்ட அல் ரஹீமிய்யா அரபுக் கல்லூரியில் ஆரம்ப ஸ்தாபகர்களில் ஒருவராக அவர் இருந்தார். தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை செவ்வனே நிறைவேற்றும் சேவையாளனாக அவர் இருந்தார். அவரின் சேவைகளை மக்கள் இன்றும் நன்றியுடன் நினைவு கூருகின்றனர். அவரின் சேவைகளைப் பாராட்டி YMMA மற்றும் சிரேஷ்ட பிரஜைகள் இயக்கம் என்பன பல விருதுகளை கடந்த காலங்களில் அளித்து கௌரவித்துள்ளன.

2017 ஜனவரி 11ஆம் திகதி தனது 96வது வயதில் அவர் காலமானார்.

எம்.ஏ.அமீனுல்லா...


Add new comment

Or log in with...