ஜோ பைடனுக்கு, ஜனாதிபதி கோட்டாபய, பிரதமர் மஹிந்த வாழ்த்து | தினகரன்

ஜோ பைடனுக்கு, ஜனாதிபதி கோட்டாபய, பிரதமர் மஹிந்த வாழ்த்து

ஜோ பைடனுக்கு, ஜனாதிபதி கோட்டாபய, பிரதமர் மஹிந்த வாழ்த்து-President Gotabaya-PM Mahinda-Opp Leader Sajith Congratulates New US President

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் ஆகியோருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி மற்றும் பிரமர் தங்களது சமூகவலைத்தள கணக்குகளின் ஊடாக இவ்வாறு வாழ்த்துத் தெரிவித்துள்ளதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளனர்.

 

 

 

 

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும் அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக பதவியேற்ற ஜோ பைடன் மற்றும் முதலாவது பெண் துணை ஜனாதிபதி கமலா ஹரிஸுக்கு இலங்கையர் சார்பில் வாழ்த்து தெரிவிப்பதாக தனது ட்விற்றர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

 

 


Add new comment

Or log in with...