சீனாவின் கொரோனா வெக் தடுப்பூசி: குறைத்து மதிப்பிட்டுள்ள பிரேஸில்

சீனாவின் கொரோனா வெக் தடுப்பூசி ஒரு பாரிய வெற்றி என்று கடந்த வாரம் வரவேற்கப்பட்ட நிலையில் அதன் செயல்திறனை பிரேஸிலில் உள்ள விஞ்ஞானிகள் இவ்வாரம் குறைத்து மதிப்பிட்டுள்ளனர்.

சீனாவின் கொரோனா வெக் என்ற கொரோனா தடுப்பூசியின் செயல் திறன் முன்னர் அறிவிக்கப்பட்டதைப் போலன்றி 50 சத வீதமாக மட்டுமே உள்ளது. ஆனால் 380 மில்லியன் கொரோனா வெக் தடுப்பூசிகளை வாங்குவதற்கான விண்ணப்பங்கள் ஏற்கனவே கிடைத்துள்ளதாக பிரேஸில் கூறியுள்ளது.

சீனாவின் பெய்ஜிங் நகரில் உள்ள சினோவக் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டு வரும் கொரோனா வெக் தடுப்பூசி இவ்வாரம் பிரேஸிலின் தலைநகரான சஹோ பவ்லோவின் புடான்டன் நிறுவனத்தில் சோதனை செய்யப்பட்டது. அதன்போது தடுப்பூசியின் செயல்திறன் 50 சத வீதம் மட்டுமே என தெரிய வந்துள்ளது. கொரோனாவுக்கான தடுப்பூசிகளின் செயல் திறன் 78 சத வீதமாக இருந்தால் அதனை பொது மக்களின் பாவனைக்காக பயன்படுத்தலாம் என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

சீனாவின் உலகளாவிய சுகாதார இராஜதந்திரத்துக்கு முக்கியமானதென இந்த தடுப்பூசி கருதப்படுகிறது. கிட்டத்தட்ட 10 நாடுகள் 380 மில்லியன் கொரோனா வெக் தடுப்பூசிகளை வாங்குவதற்கு விண்ணப்பித்துள்ளன. எனினும் அதற்கான இறுதி அங்கீகாரம் இன்னும் பெறப்படவில்லை. இந்நிலையில் இந்த தடுப்பூசி தொடர்பாக ஏற்படக்கூடிய விளைவுகள் குறிப்பிடத்தக்கதாக இருக்கும்.


Add new comment

Or log in with...