ட்ரம்பிற்கு பிரியாவிடை; பென்டகன் நிராகரிப்பு

பிரியாவிடை நிகழ்ச்சியில் பிரமாண்ட இராணுவ அணிவகுப்பு வேண்டும் என்ற டொனால்ட் ட்ரம்ப்பின் கோரிக்கையை அமெரிக்க இராணுவ தலைமையகம் நிராகரித்துள்ளது.

அமெரிக்காவில் ட்ரம்பின் பதவிக் காலம் இன்று புதன்கிழமை நிறைவடைய உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி பதவிக் காலம் முடிவடையும் போது அவருக்கு பிரியாவிடை கொடுக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.

பிரியாவிடை கொடுக்கும் நிகழ்ச்சியில் பிரம்மாண்ட இராணுவ அணிவகுப்பு நடத்த வேண்டும் என டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க இராணுவத்திடம் கோரிக்கை விடுத்தார். ட்ரம்பின் கோரிக்கையை அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகன் நிராகரித்துள்ளது.


Add new comment

Or log in with...