அடுத்த மாத இறுதிக்குள் 11 மில்லியன் இலங்கையர்களுக்கு கொரோனா தடுப்பூசி

நான்கு உற்பத்தியாளர்களுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை

அடுத்த மாத இறுதிக்குள் 11 மில்லியன் இலங்கையர்கள் கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வார்கள் என அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், தடுப்பூசியை 50 விகிதம் இலவசமாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள தற்போது நான்கு கொரோனா 

தடுப்பூசி உற்பத்தியாளர்களுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே, இலங்கையின் சனத்தொகையில் 20 சதவீதமானவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை வழங்க உலக சுகாதார ஸ்தாபனம் இணக்கம் தெரிவித்துள்ளது. அத்தோடு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியின் ஏற்றுமதியின் போது இலங்கைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என இந்திய வௌிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் இலங்கைக்கு உறுதியளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...