பேலியகொடை C City சந்தை வளாக கட்டுமானப் பணிகள் மீண்டும் ஆரம்பம்

பிரதமர் அலுவலக பிரதானி யோஷித ராஜபக்‌ஷ மேற்பார்வை

இலங்கை அரச பொறியியலாளர்கள் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான பேலியகொட C City சந்தை வளாகத்தின் கட்டுமானப் பணிகள் துறைசார்ந்த அமைச்சர் மற்றும் பிரதமரின் ஆலோசனையின் பேரில் திங்கட்கிழமை (18) மீண்டும் ஆரம்பமாகியது.

சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்திற்கு அமைவாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் பிரதமர் அலுவலக ஊழியர்களின் பிரதானி யோஷித ராஜபக்ஷவின் பூரண மேற்பார்வையின் கீழ் இந்த சந்தை வளாகத்தின் கட்டுமானப் பணிகள் இடம்பெறுகின்றன.

கிராமிய வீடமைப்பு பிராந்திய உறவுகள் நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்தவின் வழிப்படுத்தலுக்கு அமைய அந்த அமைச்சின் கீழ் செயற்படும் இலங்கை அரச பொறியியலாளர் கூட்டுத்தாபனம் இதன் கட்டுமானப் பணிகளை முன்னெடுக்கின்றது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக சேவையாற்றிய காலப்பகுதியில் 14 ஏக்கர் நிலப்பரப்பில் இவ்வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

எனினும் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின்போது இவ்வேலைத்திட்டத்தின் பணிகள் முழுமையாக கைவிடப்பட்டன.

 


Add new comment

Or log in with...