புதுடில்லியில் நேற்று இருவரும் சந்திப்பு
இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். எனது கோரிக்கையை ஏற்று, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 40 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிரதமர் மோடியுடன் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை, தமிழக மாநிலத்துக்குத் தேவையான திட்டங்கள் குறித்து மட்டுமே பேசினேன். அரசியல் பேச தற்போது தகுந்த நேரம் இல்லை என்றார். புது டில்லியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது,...
இந்தியாவிலேயே உயர்கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது.
துறைவாரியான கோரிக்கைகள் தொடர்பாக பிரதமரிடம் மனுக்களை அளித்துள்ளேன். புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்ட வேண்டும் என்று மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.
Add new comment