சீனாவில் ஐஸ்கிரீமில் கொரோனா தொற்று

கிழக்கு சீனாவில் ஐஸ்கரீம் உற்பத்திகளில் கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அந்த ஐஸ்கிரீம்கள் மீளப்பெறப்பட்டுள்ளன.  

பெய்ஜிங்கின் அருகில் தியான்ஜினில் உள்ள தாகியோடாவ் புட் கோ நிறுவனத்தில் இந்த ஐஸ்கிரீம்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதுவரை அந்த நிறுவனத்தில் இருந்து சுமார் 4,836பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன. அந்த நிறுவனம் மூடப்பட்டுள்ளது.   அங்கு பணிபுரியும் 1,600க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 700ஊழியர்களின் சோதனை முடிவுகளில் அவர்களுக்கு கொரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்தில் இருந்து 1912 ஐஸ் கிரீம் பெட்டிகள் விற்பனைக்கு வந்துள்ள நிலையில், அதனை சாப்பிட்டவர்கள் யார் யார் என்று அதிகாரிகள் அடையாளம் கண்டு வருகின்றனர்.   


Add new comment

Or log in with...