உலகில் கொவிட்–19 உயிரிழப்பு இரண்டு மில்லியனை தொட்டது | தினகரன்

உலகில் கொவிட்–19 உயிரிழப்பு இரண்டு மில்லியனை தொட்டது

கொரோனா வைரஸ் தொற்றினால் உலகெங்கும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை இரண்டு மில்லியனைத் தாண்டியுள்ளது.    சீனாவின் வூஹான் நகரில் கொரோனா தொற்றினால் முதல் உயிரிழப்புப் பதிவாகி ஓர் ஆண்டை கடந்திருக்கும் நிலையிலேயே இந்த எண்ணிக்கை பதிவாகியுள்ளது.    இதன்படி இந்த வைரஸ் தொற்றினால் மொத்தம் 2,009,991பேர் உயிரிழந்திருப்பதாக உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களை மேற்கோள்காட்டி ஏ.எப்.பி செய்தி நிறுவனம் கடந்த சனிக்கிழமை தெரிவித்தது.  

உலகெங்கும் இந்த நோய்த் தொற்றினால் 93 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருப்பதோடு அதில் 57 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் குணமடைந்திருப்பதாக கருதப்படுகிறது.    இதில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 392,139 பேர் உயிரிழந்திருப்பதோடு இதற்கு அடுத்த இடத்தில் பிரேசிலில் 208,246 பேர் உயிரிழந்துள்ளனர்.    எனினும் பல நாடுகளிலும் முறையான சோதனைகள் இடம்பெறாத நிலையில் உண்மையான உயிரிழப்பு எண்ணிக்கை கூறப்படுவதை விடவும் அதிகமாக இருக்கும் என்று நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.    


Add new comment

Or log in with...