இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு

இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாநிலத்தின் மிக உயரமான சிமறு எரிமலை வெடித்ததால் 5கிலோமீற்றர் தொலைவு வரை புகை சூழ்ந்துள்ளது.   மீண்டும் எரிமலை குமுறும் அபாயம் அதிகம் உள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். சுற்று வட்டாரத்திலிருந்து மக்களை உடனடியாக வெளியேற்றும் பணிகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. 

ஆனால், எரிமலைக்கு அருகில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது அந்த எரிமலை, அதைச் சுற்றியுள்ள இடங்கள் ஆகியவற்றின் அபாயநிலை இரண்டுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.   இந்த எரிலை கடந்த டிசம்பரில் வெடித்தபோது சுமார் 550 பேர் வெளியேற்றப்பட்டனர்.   கடந்த வெள்ளிக்கிழமை மேற்கு சுலாவெசி தீவை 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியதைத் தொடர்ந்து, சிமறு எரிமலை வெடிப்பு நேர்ந்துள்ளது. நிலநடுக்கத்தில் குறைந்தது 56 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரபூர்வத் தகவல்கள் குறிப்பிட்டன.   


Add new comment

Or log in with...