பொலிஸாரின் விசாரணைகளில் தலையிடுவோருக்கு IGP எச்சரிக்கை | தினகரன்

பொலிஸாரின் விசாரணைகளில் தலையிடுவோருக்கு IGP எச்சரிக்கை

- பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் சுற்றுநிருபம்

பலவித குற்றச்செயல்கள் குறித்து பொலிஸார் மேற்கொண்டுள்ள விசாரணைகளில் தலையிடுவதற்கும் செல்வாக்கு செலுத்துவதற்கும் சில இனந்தெரியாத சக்திகள் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன என பொலிஸ் மாஅதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அனைத்து பொலிஸ் நிலையங்களினதும பொறுப்பதிகாரிகளிற்கு அனுப்பி வைத்துள்ள சுற்றுநிருபத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பலர் பொலிஸ் உத்தியோகத்தர்களை தொலைபேசிகளில் தொடர்புகொண்டு தாங்கள் பொலிஸ் மாஅதிபரின் உறவினர்கள் என தெரிவிக்கின்றனர் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் தங்களின் சார்பாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து அவர்களிற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுக்குமாறும் பொலிஸ் மாஅதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 


Add new comment

Or log in with...