பட்டப்பின் கல்வி முகாமைத்துவ டிப்ளோமா பாடநெறிக்கு விண்ணப்பம் | தினகரன்

பட்டப்பின் கல்வி முகாமைத்துவ டிப்ளோமா பாடநெறிக்கு விண்ணப்பம்

பட்டப்பின் கல்வி முகாமைத்துவ டிப்ளோமா பாடநெறிக்கு விண்ணப்பம்-Education Management Diploma Application Called

தேசிய கல்வி நிறுவகத்தால் பட்டப்பின் கல்வி முகாமைத்துவ முழுநேர டிப்ளோமா பாட நெறிக்கான (2021) விண்ணப்பங்கள் தேசிய நாளிதழ்களில் கோரப்பட்டுள்ளன.

கல்வி முகாமைத்துவ அபிவிருத்தி மற்றும் முகாமைத்துவபீடம் தேசிய கல்வி நிறுவகம் மீப்பே ஆகியன பயிற்சி நிலையங்களாக விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

கல்வித்தகமை தொழிற்றகமை குறித்த விபரங்கள் கோரப்பட்ட நாளிதழ் விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

விண்ணப்ப முடிவுத்திகதி 31.01.2021 ஆகும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நிறுவனத்தலைவரின் சிபாரிசுடன் பணிப்பாளர், தொழில்வாண்மை அபிவிருத்தி மற்றும்  கல்வி முகாமைத்துவத் திணைக்களம், கல்வி  தலைமைத்துவ அபிவிருத்தி மற்றும் முகாமைத்துவபீடம் தேசிய கல்வி நிறுவகம், மீப்பே சந்தி, பாதுக்கை எனும் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

(நற்பிட்டிமுனை தினகரன் நிருபர் - எஸ் சிராஜுதீன்)


Add new comment

Or log in with...