நடமாடும் ஆய்வுகூடம் கையளிப்பு

கொவிட் -19 ஒழிப்பு தொடர்பான நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் மொனராகல பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவிற்கு நடமாடும் ஆய்வு கூடம் ஒன்றை ஐக்கிய அமெரிக்கா வழங்கியுள்ளது.

இது தொடர்பாக ஐக்கிய அமெரிக்கா தூதரகம் விடுத்துள்ள செய்தியில் தெரிவித்திருப்பதாவது,

யு.எஸ். சர்வதேச அபிவிருத்திக்கான ஏஜென்சி ஊடாக இதற்கான நிதி உதவி செய்யப்பட்டுள்ளதாகவும் தினம் 100 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் உட்பட ஏனைய சுகாதார வசதிகளை மேற்கொள்ள இதனூடாக முடியும் என்றும் தெரிவித்துள்ளது. அத்துடன் சுகாதாரம் தொடர்பான சேவைகளை கிராமப்புற சமூகங்களுக்கு வழங்குவதற்கு இது உதவியாக உள்ளது, இலங்கையில் COVID-19 பரவுவதைக் குறைக்க அமெரிக்க அரசு 6 மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்கியுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலினா பி. டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

(அக்குறணை குறூப் நிருபர்)


Add new comment

Or log in with...