உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய 32 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் | தினகரன்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய 32 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல்

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய 32 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் (ஓய்வு) சரத் வீரசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் விசாரணைகள் நிறைவு பெற்ற 08 ஆவணங்கள் சட்ட மாஅதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், சுமார் 241 பேர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


Add new comment

Or log in with...