மிகப் பழமையான விலங்கு குகை ஓவியம் கண்டுபிடிப்பு

45,000 ஆண்டுகளுக்கு முன்னர் வரையப்பட்ட உலகின் மிகப் பழமையானது என்று நம்பப்படும் குகை விலங்கு ஓவியம் ஒன்று இந்தோனேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அடர் சிவப்பு நிறத்தை கொண்டு உண்மையான அளவு கொண்ட பன்றி ஒன்றின் குகை ஓவியமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுலவேசி தீவில் இருக்கும் தொலைதூரப் பள்ளத்தாக்கு ஒன்றில் லீங் டெடொங்கே குகையில் இந்த ஓவியம் உள்ளது.

இந்தப் பிராந்தியத்தில் மனிதன் குடியேறிய ஆரம்ப காலத்தைக் காட்டுவதாக இது உள்ளது.

ஒரு தோற்றத்தை வெளிப்படுத்தும் பழைமையான ஓவியமாக இது இருந்தபோதும் தென்னாபிரிக்காவில் 73,000 ஆண்டுகளுக்கு முன்னர் கைகளால் வரையப்பட்ட கோடுகள் போன்ற வடிவங்களே உலகின் மிகப்பழமையான குகை ஓவியமாக கருதப்படுகிறது.


Add new comment

Or log in with...