கடந்த ஒக்டோபர் 11 ஆம் திகதி இடம்பெற்ற புலமைப்பரிசில் பரீட்சைகள் 2,936 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றிருந்தது.
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு 331,741 மாணவர்கள் பரீட்சைக்கு விண்ணப்பிருந்த நிலையில், 326,264 பேர் அதற்காக தோற்றியிருந்ததாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்திருந்தது.
இன்றையதினம் (15) கல்வியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள புலமைப்பரிசில் வெட்டுப்புள்ளிகள் பட்டியலின் அடிப்படையில், ஆண்கள் பாடசாலைகளில் தமிழ் மொழி மூலம், றோயல் கல்லூரியில் மாணவர்களை இணைப்பதற்கான குறைந்தபட்ச புள்ளிகளாக 187 புள்ளிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை இது 180 புள்ளிகளாக காணப்பட்டது.
பெண்கள் பாடசாலைகளில் (தமிழ்) அனுமதிப்பதற்கான வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரிக்கான வெட்டுப்புள்ளியாக 181 புள்ளிகளும் (கடந்த முறை 175), பருத்தித்துறை மெதடிஸ் மகளிர் உயர் தர பாடசாலைக்கான வெட்டுப்புள்ளியாக 174 புள்ளிகளும் (கடந்த முறை 167), அறிவிக்கப்பட்டுள்ளன.
தமிழ் கலவன் பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில், ஹட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரிக்கு 181 புள்ளிகளும் (கடந்த முறை 168), மூதூர், மத்திய கல்லூரிக்கு 171 புள்ளிகளும் (கடந்த முறை 159) அறிவிக்கப்பட்டுள்ளன.
இம்முறை புலமைப்பரிசில் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 20,000 என்பதோடு, இதில் விசேட தேவையுடைய மாணவர்கள் 250 பேருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
2020 புலமைப்பரிசில் பெறுபேறுகள் கடந்த நவம்பர் 15ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தன.
ஆண்கள் பாடசாலை - வெட்டுப் புள்ளிகள்
- கொழும்பு ரோயல் கல்லூரி - 187
- டி.எஸ் சேனாநாயக்க கல்லூரி, கொழும்பு 07 - 179
- பருத்தித்துறை ஹாட்லி கல்லுரி - 178
- இசிபத்தான கல்லூரி, கொழும்பு 05 - 174
- யாழ். இந்துக் கல்லூரி - 166
- யாழ். மத்திய கல்லூரி - 161
- மட்டக்களப்பு மெதடிஸ்ட் மத்திய கல்லூரி - 160
- ஓட்டமாவடி மத்திய கல்லூரி - 160
- சாய்ந்தமருது சாஹிரா கல்லூரி - 160
- திருகோணமலை கோணேஸ்வரா இந்து கல்லூரி -159
- புத்தளம் ஷாஹிரா தேசிய கல்லூரி - 157
பெண்கள் பாடசாலை - வெட்டுப் புள்ளிகள்
- பம்பலப்பிட்டி, முஸ்லிம் மகளிர் கல்லூரி - 181
- பருத்தித்துறை, மெதடிஸ்ட் பெண்கள் உயர்தர பாடசாலை - 174
- யாழ்ப்பாணம், வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலை - 173
- கல்முனை, மஹ்மூத் பாலிகா கல்லூரி - 170
- யாழ். ஹிந்து மகளிர் கல்லூரி - 169
- வின்சென்ட் பெண்கள் உயர்தர பாடசாலை, மட்டக்களப்பு - 169
- கண்டி, பதியுத்தீன் மஹ்மூத் பாலிகா வித்தியாலயம் - 166
- ஹட்டன், புனித கெப்ரியல் பெண்கள் கல்லூரி, - 166
- பம்பலப்பிட்டி, இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி - 163
- திருகோணமலை, ஶ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி - 160
கலவன் பாடசாலை - வெட்டுப் புள்ளிகள்
- ஹட்டன், ஹைலண்ட்ஸ் கல்லூரி - 181
- மூதுர், மத்திய கல்லூரி - 171
- கொட்டகலை, கேம்பிரிட்ஜ் கல்லூரி - 168
- கொக்குவில், கொக்குவில் இந்து கல்லூரி - 167
- ஹப்புகஸ்தலாவ, அல் மின்ஹாஜ் தேசிய பாடசாலை - 166
- சம்மாந்துறை, முஸ்லிம் மத்திய கல்லூரி - 165
- முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி - 165
- கெக்குணுகொல்ல தேசிய பாடசாலை - 164
- மாவலனல்லை, சாஹிரா முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் - 164
- கல்முனை, கார்மெல் பற்றிமா கல்லூரி - 164
- ஹாலி எல, ஊவா விஞ்ஞான கல்லூரி - 164
- விஷ்வமடு மகா வித்தியாலயம் - 164
- கரவெட்டி, நெல்லியடி மத்திய கல்லூரி - 163
- கம்பளை, ஷாஹிரா கல்லுரி - 162
- கொழும்பு 12, விவேகானந்தா கல்லூரி - 162
- மாவனல்லை, பதுரியா மகா வித்தியாலயம் - 162
- அக்கரைப்பற்று, ஶ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி - 162
- மஸ்கெலியா, புனித ஜோசப் தமிழ் வித்தியாலயம் - 161
- அட்டாளைச்சேனை, மத்திய கல்லூரி - 161
- கொட்டகலை, தமிழ் மகா வித்தியாலயம் - 161
சிங்கள மொழி மூல பாடசாலைகளின் வெட்டுப்புள்ளிகள்
Add new comment