தினசரி கொரோனா உயிரிழப்பு அமெரிக்காவில் புதிய உச்சம் | தினகரன்

தினசரி கொரோனா உயிரிழப்பு அமெரிக்காவில் புதிய உச்சம்

அமெரிக்காவில் கொரோனா தொற்றினால் தினசரி உயிரிழப்பு எண்ணிக்கை சுமார் 4,500 ஆக சாதனை அளவுக்கு அதிகரித்திருப்பதாக அது தொடர்பில் கணக்கெடுப்பை நடத்தும் ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 235,000க்கும் அதிகமான புதிய நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு 4,470 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தப் பொருந்தொற்றினால் அமெரிக்காவில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் சுமார் 131,000 ஆக அதிகரித்துள்ளது.

கொவிட்–19 தொற்று ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம் இந்த நோயினால் சராசரி வாராந்த உயிரிழப்பு எண்ணிக்கையும் அமெரிக்காவில் அதிகரித்திருப்பதாக அந்தப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் கொரோனா தொற்று கட்டுக்கடங்காது அதிகரித்து வரும் நிலையில் அந்நாட்டில் நோய்த் தொற்றுச் சம்பவங்கள் 22.8 மில்லியனை எட்டியிருக்கும் நிலையில் முன்றரை இலட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.


Add new comment

Or log in with...