தேசிய விளையாட்டுச் சங்கம், சம்மேளனங்களுக்காக ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம் | தினகரன்

தேசிய விளையாட்டுச் சங்கம், சம்மேளனங்களுக்காக ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்

இளைஞர் விவகார, விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் உத்தரவுக்கு அமைய தேசிய விளையாட்டுச் சங்கங்களின் செயற்பாடுகளை ஒழுங்கமைத்தல் மற்றும் ஒருங்கிணைந்த விளையாட்டு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மாவட்ட மட்டத்தில் விரிவாக்கும் நோக்கில் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் பணியாற்றும் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் விளையாட்டு அதிகாரிகளை விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட 71 தேசிய விளையாட்டு சங்கங்கள் மற்றும் சம்மேளனங்களுக்கான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளுக்காக நியமித்து, அவர்களுக்கான நியமனக் கடிதங்களைக் கையளிக்கும் நிகழ்வு விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அமல் எதிரிசூரியவின் தலைமையில் இளைஞர் விவகார, விளையாட்டுத் துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

தேசிய விளையாட்டுச் சங்கங்கள் மற்றும் சம்மேளனங்கள் விளையாட்டுச் சட்டத்திற்கு அமைவாக தமது சங்கத்தின் செயற்பாடுகளை மேற்கொள்கின்றார்களா என்பது தொடர்பில் கண்காணித்தல், வெளிப்படைத் தன்மையுடன் விளையாட்டுச் சங்கம் மற்றும் சம்மேளனங்கள் செயற்படுகின்றனவா என்பதைக் கண்காணித்தல் மற்றும் தேசிய விளையாட்டுச் சங்கம் மற்றும் சம்மேளனங்கள் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்துடன் இலகுவாக ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதும் இந்த ஒருங்கிணைப்பாளர்களிடமிருந்து விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் எதிர்பார்க்கின்றது.

இந்நிகழ்வில் இளைஞர் விவகார, விளையாட்டுத் துறை அமைச்சரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் ரொனி இப்ராஹீம், விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர்களான ஆர். பி. விக்ரமசிங்க, திலக் அல்போன்சு, ஷீலா த சேரம் ஆகியோருடன், தேசிய விளையாட்டுச் சங்கம் மற்றும் சம்மேளனங்களின் தலைவர்கள், செயலாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்

புத்தளம் விசேட நிருபர் 

 


Add new comment

Or log in with...