யாழில் ஓவியக் கண்காட்சியுடன் போராட்டம் நடத்திய உறவுகள் | தினகரன்

யாழில் ஓவியக் கண்காட்சியுடன் போராட்டம் நடத்திய உறவுகள்

சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி கருத்து ஓவியக் கண்காட்சியுடன் யாழ். நகரில் நேற்று போராட்டம் நடைபெற்றது.

குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்.மத்திய பஸ் நிலையம் முன்பாக நேற்றுக் (13) காலை இந்தக் கண்காட்சியுடனான போராட்டம் நடைபெற்றது. இதன்போது, சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டுமென்றும் தெற்கில் உள்ளவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவது போன்று சிறைக் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டுமெனவும் அரசாங்கத்திடம் அரசியல் கைதிகளின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தியாக தீபம் திலீபனின் நினைவுகூரல், யாழ். பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி ஆகிய இரண்டு விடயங்களிலும் தமிழ்த் தேசியக் கட்சிகளும் தமிழ் தேசிய உணர்வாளர்களும் ஒன்றுசேர்ந்து செயற்பட்டது போன்று அரசியல் கைதிகளின் விடயத்திலும் அனைவரும் ஒருமித்து செயற்பட்டு விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென்றும் இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

 


Add new comment

Or log in with...