சுபீட்சமான வாழ்வை தரும் தினமாக தைப் பொங்கல் அமையட்டும்

‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்பது ஆண்டாண்டு காலமாக பெரியவர்களால் நம்பப்பட்டு போற்றிப் புகழும் வாசகமாக அமைகின்றது. அந்தவகையில் இந்த தைப்பொங்கல் அனைவருக்கும் சுபீட்சமான வாழ்க்கையை அமைத்துக்கொடுக்க வேண்டுமென புத்தசாசன மத மற்றும் கலாசார அமைச்சுக்கான இந்துமத இணைப்பாளர் கலாநிதி சிவஸ்ரீ இராமசந்திர குருக்கள் பாபுசர்மா தனது பொங்கல் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ;

“உழவுக்கும் தொழிலுக்கும் வந்தணை செய்வோம் என்பார்கள். சூரியபகவானுக்கு நன்றியைத் தெரிவித்து உழுதுண்டு வாழ்வோரே வாழ்வர் என்பதற்கமைய அமுது படைத்து குலதெய்வ வழிபாடு செய்து அனைவருடனும் அன்பை பகிர்ந்து நாம் அனைவரும் நல்ல மனிதர்களாக நற்பண்புமிக்கவர்களாக இந்த சமுகத்தில் இருக்கவேண்டுமென்பது அனைவரது உள்ளத்திலும் இருக்கும் அவாவும் உயர்ந்த குணமுமாகும். அந்தவகையில் தமிழர்களின் பண்டிகையாக கருதப்படும் தைப்பொங்கல் தினத்தில் தங்களது எண்ணங்கள் அனைத்தும் ஈடேற எல்லாம்வல்ல மகாவிஷ்ணு பெருமான் அருள்புரிய வேண்டுமென அனைவருக்கும் பொங்கல் தின வாழ்த்துகளையும் ஆசிகளையும் தெரிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.

 

 


Add new comment

Or log in with...