நாவல்காட்டில் மனித எச்சங்கள் மீட்பு; கூரிய ஆயுதத்தால் தாக்கியே கொலை | தினகரன்

நாவல்காட்டில் மனித எச்சங்கள் மீட்பு; கூரிய ஆயுதத்தால் தாக்கியே கொலை

முல்லைத்தீவு நாவல்காட்டு பகுதியில் கடந்த மாதம் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வைத்திய பரிசோதனையில் அந்நபர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொல்லப்பட்டுள்ளதாக சட்ட வைத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவல்காடு பகுதியில் கடந்த (30.12.20 ) அன்று இனம் காணப்பட்ட மனித உடற் பாகங்கள் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய மீட்கப்பட்டு அவை ஆய்வு செய்யப்பட்டன. இவ் அறிக்கை நீதிமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளது.

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக சட்டவைத்திய அதிகாரியினால் குறிப்பிடப்பட்டுள்ளது. இந் நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

புதுக்குடியிருப்பு விசேட நிருபர்


Add new comment

Or log in with...