நிவ்வெளிகம தோட்டத்தில் காணி அபகரிப்பு; மக்கள் கடும் எதிர்ப்பு | தினகரன்

நிவ்வெளிகம தோட்டத்தில் காணி அபகரிப்பு; மக்கள் கடும் எதிர்ப்பு

நோர்வூட் நிவ்வெளிகம தோட்டபகுதியில் மூன்று ஏக்கர் காணியை வெளியார்  அபகரிக்கமுயன்றமையினால் நிவ்வளிகம தோட்டமக்கள் நேற்று எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

பொகவந்தலாவ பெருந்தோட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கும் காசல் ரீ நீர்தேக்கத்தை  அண்மித்த நிவ்வெளிகம தோட்டத்தில் உள்ள காணியினை குறித்த பிரதேசத்திற்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தர் தம்புளை பகுதியினை சேர்ந்தவர்களுக்கு விற்பனை செய்துள்ளதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். தம்புளை பகுதியிலுள்ள சிலர் நேற்றைய  தினம் அந்த காணியினை அபகரிக்க முயன்ற போது பொதுமக்கள்  சென்று எதிர்ப்பு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கருத்து தெரிவிக்கையில் இது எங்கள் தோட்டகாணி  எமது பிரதேசத்திற்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தர் வெளியாருக்கு பணத்திற்கு விற்றுள்ளார், இது தொடர்பில் நாம் நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளாேம். இதேவேளை மக்கள் அந்த பகுதிக்கு சென்றவுடன் தம்புள்ள பிரதேசத்தை சேர்ந்தவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

இதேவேளை சம்பவ இடத்திற்கு நோர்வூட்  பொலிஸார் வருகை தந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர்


Add new comment

Or log in with...