ஹூவாவி மீது குற்றம் சுமத்தும் அமெரிக்கா | தினகரன்

ஹூவாவி மீது குற்றம் சுமத்தும் அமெரிக்கா

சீனாவின் பாரிய தொலைத்தொடர்பு சேவையான ஹூவாவி கடந்த வருடம் சீன அரசாங்கத்துடன் இணைந்து அதன் பாவனையாளர்களின் தகவல்களை சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹூவாவி மட்டுமன்றி சீனாவின் மற்றைய பிரதான தொலைத்தொடர்பு சேவையாளரான ZTE போன்ற ஏனைய நிறுவனங்களும் இது போன்ற ஆபத்துடன் கூடியவையென சர்வதேச சமூகத்துக்கு இப்போது தெரியவந்துள்ளது.  ஹூவாவி பாதுகாப்புக்கு ஒரு ஆபத்து என்று அமெரிக்கா வகைப்படுத்தியுள்ளதுடன் அமெரிக்காவின் அரசாங்க ஒப்பந்தங்களுக்கான விலை கோரல்களுக்கு அது தகுதியுடையது அல்ல என்றும் கூறியுள்ளது. அத்துடன் அனைத்து அமெரிக்க கப்பல்களின் உட்கட்டமைப்பில் இருந்தும் ஹூவாவியினால் தயாரிக்கப்பட்ட அனைத்து உபகரணங்களும் அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்று அமெரிக்க அரசாங்கம் அறிவித்துள்ளது. 

இவ்வாறு ஹூவாவி உபகரணங்கள் அனைத்தையும் மாற்றுவதற்கான செலவை அமெரிக்க அரசாங்கமே ஏற்றுக் கொள்ளும். அமெரிக்காவுக்கு ஹூவாவி எத்தனை பெரிய அச்சுறுத்தல் என்பதை இந்த செயற்பாட்டின் மூலம் ஒருவர் தெரிந்து கொள்ளலாம். 

ஹூவாவி விவகாரம் நன்கு தெரிந்த ஒன்றாக உள்ள நிலையில் இணையத்தையும் அதன் ஊடாக செல்லும் அனைத்து தனிப்பட்ட மற்றும் முக்கியமான தகவல்களையும் கட்டுப்படுத்த சீனா முயற்சித்து வருவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.(பிஸினஸ் ஸ்ராண்டட்)


Add new comment

Or log in with...