அடுத்த நயன்தாரா பிரியா பவானி சங்கரா ? | தினகரன்

அடுத்த நயன்தாரா பிரியா பவானி சங்கரா ?

தற்போதைக்கு தமிழ் சினிமாவில் கைவசம் அதிக படங்கள் வைத்துள்ள நடிகைகளில் மிக முக்கியமானவராக இருப்பவர் பிரியா பவானி சங்கர்.

செய்தி வாசிப்பாளராக தன்னுடைய கேரியரை தொடங்கி பின்னர் சீரியல்கள் மூலம் பிரபலமானவர்.

தற்போது இளம் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்று வருடத்திற்கு 5 படங்களுக்கு மேல் நடித்து வருகிறார் ப்ரியா பவானி சங்கர். இந்நிலையில் 2021 ஆம் ஆண்டு மட்டும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் கிட்டத்தட்ட 10 படங்களுக்கு மேல் வெளியாக உள்ளதாம்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு நடிகர்களின் பார்வையும் பிரியா பவானி சங்கர் மீது விழுந்துள்ளது.

ஐந்து மொழிகளில் பிரியா பவானி சங்கர் நடிக்கும் படம் அடுத்தாண்டு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரியா பவானி சங்கர் என்ற நடிகைக்காகவே சீரியல் பார்த்த இளம் ரசிகர்கள் நிறைய இருக்கின்றனர். அந்த வகையில் அவர்களின் வரவேற்ப்பை பெற்று தற்போது தமிழ் சினிமாவின் இளம் நடிகர்கள் அனைவரின் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் அடுத்தடுத்து பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியாக உள்ள படங்கள் இதோ:-
ஓ மண பெண்ணே, பத்து தல, பொம்மை, களத்தில் சந்திப்போம், குருதி ஆட்டம், ருத்ரன், இந்தியன் 2, கசட தபற, வான், அசோக் செல்வன் உடன் பெயரிடப்படாத படம்.

பிரியா பவானி சங்கரின் பட வரிசையை பார்க்கும்போது கண்டிப்பாக நயன்தாராவை ஓரம்கட்டி தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக விரைவில் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Add new comment

Or log in with...