அபராதம் செலுத்தாமையால் சிறையில் இருப்போருக்கு மன்னிப்பு

அபராதம் செலுத்தாமையால் சிறையில் இருப்போருக்கு மன்னிப்பு-To Ease Congestion In Prisons Who Unable to Pay Fines to Be Released

அபராத பணத்தை செலுத்த தவறியதன் காரணமாக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் விசேட பொதுமன்னிப்பின் கீழ் இவ்வாறு இக்கைதிகளை இன்று (09) விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, சிறைச்சாலைகள் திணைக்கள பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்

இன்று (09) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து, சிறைகளில் இட நெருக்கடியை குறைக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாக இவ்வாறு கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான கைதிக ள் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளான நூற்றுக்கணக்கான கைதிகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பதோடு, தொடர்ந்தும் தினமும் இவ்வாறு அடையாளம் காணப்பட்டு வருகின்றமை  குறிப்பிடத்தக்கது.

சிறைச்சாலைகளில் நிலவும் நெருக்கடியை குறைக்கும் வகையில் விரைவில் 8,000 சிறைக் கைதிகளை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, சிறைக்கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அண்மையில் தெரிவித்திருந்தார்.


Add new comment

Or log in with...