இங்கிலாந்து வீரர்களுக்கு கொரோனா இல்லை | தினகரன்

இங்கிலாந்து வீரர்களுக்கு கொரோனா இல்லை

மொயீன் அலிக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் எவருக்கும் கொரோனா இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை அடுத்து மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான பயிற்சிகளில் ஈடுபடுவதற்கு இங்கிலாந்து அணியினர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கை வந்தடைந்த சொற்ப நேரத்தில் மொயீன் அலிக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனை அடுத்து ஏனைய வீரர்களிடமிருந்து பிரிந்து ஹோட்டல் ஒன்றில் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மொயீன் அலிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டமை காலியில் நடைபெறவுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துமோ என்ற அச்சம் நிலவியது.

ஆனால், ஹம்பாந்தோட்டையில் அணியினர் கடைப்பிடித்துவரும் உயிரியல் பாதுகாப்பு குமிழி நெறிமுறைகளால் சுமுக நிலை ஏற்பட்டுள்ளது. மொயீன் அலியைத் தவிர்ந்த ஏனையவர்களுக்கு தொற்று இல்லை என்ற உறுதிப்படுத்தப்பட்ட நல்ல செய்தி கிடைத்துள்ளது. எங்களால் மட்டுப்படுத்தப்பட்ட பயிற்சிகளை இன்று (புதன்கிழமை) பிற்பகல் ஆரம்பிக்க முடியும்' என இங்கிலாந்து அணி பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...