மடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை | தினகரன்

மடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை

மடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை-Dialog Manusathkara Project-5

நாங்கள் தனியாகத்தான் இந்த உலகத்தில் பிறக்கின்றோம். ஆனால் ஆயிரக்கணக்கான உறவினால் எங்கள் வாழ்க்கை பின்னி பிணைக்கப்பட்டுள்ளது. இந்த தொடர்புகள் தான் எங்கள் வாழ்க்கையை அர்த்தப்படுத்துகின்றன. ஒருவர் இன்னொருவரோடு கொண்டிருக்கும் மனிதநேயம் அல்லது அன்பின் அளவினை பொருத்துதான் இந்த உறவுகள் ஏற்படுகின்றன. அப்பேர்பட்ட மனித உறவின் மகத்துவத்தை முன்னெடுத்துச் செல்லும் டயலொக் நிறுவனத்தின் மனிதாபிமான நடவடிக்கையின் ஐந்தாவது செயற்பாடு, திஸ்ஸமஹாராமையில் வசிக்கின்ற ஒரு குடும்பத்தை மையமாகக் கொண்டு அண்மையில் முன்னெடுக்கப்பட்டது.

மடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை-Dialog Manusathkara Project-5

திஸ்ஸமஹாராம பகுதியைச் சேர்ந்த எம்.கே. நிஹால் அவர்கள், நன்னீர் மீன்பிடி தொழிலை வாழ்வதாரமாகக் கொண்டவர். சிலகாலத்திற்கு முன் தன் துணையை இழந்த இவரும், இவரது மகளும் தற்போது தனித்து வாழ்ந்து வருகின்றனர். தனது மகளின் எதிர்காலத்தின் மீது பெரிதும் அக்கறைகொண்ட இவர், அதற்காக பல சிரமங்களை அனுபவித்துகொண்டு பாடுபட்டு வருகிறார். ஒரு புதிய வீட்டை கட்டிமுடிக்கும் கனவோடு, அதற்கான அத்திவாரத்தையும் இட்டார். ஆனால் திடீரென ஏற்பட்ட விபத்தின் காரணமாக அந்த கனவுகள் எல்லாம் தவிடுபொடியாகி, அவரை விட்டு தொலைவில் போய்விட்டன.

மடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை-Dialog Manusathkara Project-5

ஒரே இடத்தில் முடக்கம் பெற்ற அவரது வாழ்க்கையை கரையேற்றி கொள்வதற்காக தன் முயற்சியால் சம்பாதித்த அனைத்தையும் அவர் அடகு வைத்தார். அதேநேரம் சிறுமியாக இருந்த மகள் இன்று பருவமடைந்து, சமூகத்தின் பொல்லாக் கண்களிலிருந்து விடுபட்டு கொள்ள பாதுகாப்பு தேடுகிறாள். பாதுகாப்பற்ற வீட்டில் சுகாதார வசதிகள் எதுவும் இன்றி தன் மகள் படும் அவதியைக் கண்டு நிஹால், மனம் நொந்து வாழ்ந்து வருகிறார். இச்சமயத்தில் மகளுக்கும் அவருக்கும் ஆறுதலாய் இருப்பது அவரது தாயார் மட்டுமே. பல்வேறு விதத்திலும் சிரமங்களுக்கு இவர் முகம் கொடுத்து வந்தாலும் தனது மகளின் கல்வி நடவடிக்கையை இடையறாது பார்த்துகொண்டார். தன் சக்தியெல்லாம் ஒன்று திரட்டி தனக்கு ஏற்பட்ட விபத்திலிருந்து அவர் மீண்டு வந்துவிட்டார் என்றாலும், முன்னரைபோன்று மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்கு அவரால் முடியாதுள்ளது. அத்தொழிலுக்கு தேவையான உபகரணங்கள் இல்லாமையே இதற்கு பிரதான காரணமாகும்.

மடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை-Dialog Manusathkara Project-5

தற்போது உயர் தரத்தில் கல்வி பயின்று வரும் தனது மகளை அடுத்த கட்டம் நோக்கி அழைத்துச் செல்வதற்கு வருந்தி உழைக்கும் நிஹாலுக்கு, வலு சேர்க்கும் வகையில் டயலொக் மனிதாபிமான நடவடிக்கைக் குழு அவரோடு கை கோர்த்து கொண்டது.. “எனக்கு மறுபடியும் மீன் பிடித் தொழிலில் ஈடுபட தெம்பு இருக்கிறது. ஆனால் அதனை தொடங்குவதற்குதான் வழி இல்லை. எனது வள்ளத்தை நான் அடகு வைத்திருக்கிறேன். எனது வலையும், அதற்குரிய உபகரணங்களும் தற்போது என்னிடம் இல்லை. இதையெல்லாம் திரும்ப பெறுவதற்கு என்னிடம் வசதியும் இல்லை. இவைகள் எனக்கு கிடைக்குமாக இருந்தால் நான் எவரையும் தங்கி வாழத்தேவையில்லை. என் குடும்பத்தை என்னால் பார்த்து கொள்ள முடியும்” என்று நம்பிக்கையோடு பேசினார் நிஹால்.

மடிந்த எதிர்பார்ப்புகளை மீட்டெடுத்த டயலொக் மனிதாபிமான நடவடிக்கை-Dialog Manusathkara Project-5

சிறந்த எதிர்காலத்தையும் வாழ்க்கையில் வெற்றியையும் எதிர்பார்த்திருப்போருக்கு என்றும் உற்ற துணையாய் இருக்கும் டயலொக் நிறுவனத்தின் அனுசரணையில் முன்னெடுக்கப்படும் மனிதாபிமான நடவடிக்கையானது, நிஹாலின் வள்ளத்தை அடகிலிருந்து மீட்டெடுத்து சீரமைத்து தந்ததோடு, மீன் பிடிக்கு தேவையான உபகரணங்களையும் பெற்று தந்து, ஊர் மக்களின் ஒத்துழைப்போடு அவரது வீட்டையும் மிக விரைவாக புனரமைப்பு செய்து கொடுத்ததோடு மட்டுமல்லாமல், வீட்டுக்குத் தேவையான வீட்டு உபயோகப் பொருட்களையும், மகளின் இணைய வழி கல்வி நடவடிக்கைக்குத் தேவையான ஸ்மார்ட் தொலைபேசியினையும் பெற்று கொடுத்தது. இதன் மூலமாக டயலொக் மனிதாபிமான நடவடிக்கை நிஹால் அவர்களுக்கு பக்கபலமாகவிருந்து, மீண்டும் அவரது வாழ்வை தொடங்குவதற்கு தேவையான ஊக்கத்தை வழங்கி, வெற்றிகரமாக தனது பணியை நிறைவு செய்து கொண்டது.


Add new comment

Or log in with...