ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு பிணை வழங்க வேண்டும்: லக்ஷ்மன் கிரியெல்ல

- பயங்கரவாத செயற்பாட்டுடன் தொடர்புடையவருக்காக உங்களை போன்றவர் பேசக்கூடாது – அமைச்சர் சரத் வீரசேகர
- ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு கொரோனா தொற்று அடையாளம்

சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் எந்தவிதமானக் குற்றச்சாட்டுக்களுமின்றி 09 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு பிணை வழங்க நீதி அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

லக்ஷ்மன் கிரியெல்லவுக்கு பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேக்கர,

பயங்கரவாதச் செயற்பாடுகளுடன் தொடர்புடைய ஒருவருக்காக உங்களைப் போன்ற ஒருவர் பேசக்கூடாதென்றும் கூறினார். பாராளுமன்றம் நேற்று வியாழக்கிழமை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் முற்பகல் 10 மணிக்குக் கூடியது.

சபாநாயகர் அறிவிப்பு, மனுக்கல் சமர்ப்பணத்தை ஒழுங்குப் பிரச்சினை எழுப்பி உரையாற்றும்போதே லக்ஷ்மன் கிரியெல்ல இவ்வாறு சபையில் கேள்வி எழுப்பினார். தொடர்ந்தும் பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, 'உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின்போது தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்ட பயங்கரவாதியுடன் தாக்குதல் நடைபெறுவதற்கு முன்னர் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மூன்றுமுறை தொலைபேசியூடாகப் பேசியுள்ளார்.

எகிப்தைச் சேர்ந்த பெண்ணையே அவர் திருமணம் செய்துள்ளார். அந்தப்பெண் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர். மேலும் அவர் நடத்திவந்த பாடசாலை ஒன்றில் சஹ்ரான் போதனை செய்துள்ளார். அமெரிக்காவால் தடைசெய்யப்பட்டுள்ள அமைப்பொன்றே இதற்கான நிதியுதவிகளை வழங்கியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே ஹிஸ்புல்லாஹ் கைதுசெய்து தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.

இதேவேளை, கடந்த வருடம் ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டு, குற்றப் புலனாய்வு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்


Add new comment

Or log in with...