உடல்களை எரிக்க பரிந்துரை; எக்காரணத்திற்காகவும் மாற்றப்படாது | தினகரன்

உடல்களை எரிக்க பரிந்துரை; எக்காரணத்திற்காகவும் மாற்றப்படாது

உடல்களை எரிக்க பரிந்துரை; எக்காரணத்திற்காகவும் மாற்றப்படாது-Dead Bodies of the COVID19 Victims Should Be Cremated

கொரோனா நோய்த்தொற்று காரணமாக இறந்தவர்களின் உடல்கள் தகனம் செய்யப்படுமெனவும் எக்காரணத்திற்காகவும் அந்த நடைமுறை மாற்றப்படாது எனவும், சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் இது குறித்து கருத்துத் தெரிவித்த சுகாதார அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அமைச்சர் சுதர்ஷனி பெனாண்டோ புள்ளேயிடம், வைரஸ் தொடர்பான விசேடநிபுணர்கள் குழு அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளதாகவும் அதன் அடிப்படையில், கொரோனா காரணமாக மரணிப்பவர்களின் உடல்களை தகனம் செய்ய வேண்டுமென அதில் தெரிவித்துள்ளதாகவும், சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்தார்.

அதற்கமைய சம்பந்தப்பட்ட அறிக்கை தற்போது சடலங்கள் தகனம் செய்யப்படுமா அல்லது அடக்கம் செய்யப்படுமா என்பது குறித்து விசாரணை நடத்தி வரும் நிபுணர் குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

எனவே, மத ரீதியான அல்லது வேறு எந்தவொரு காரணத்திற்காகவும் அந்நடைமுறையை மாற்றப் போவதில்லை என அவர் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...