கடலில் தத்தளித்த வடபகுதி மீனவர்களை இந்திய கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர் | தினகரன்

கடலில் தத்தளித்த வடபகுதி மீனவர்களை இந்திய கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர்

படகு பழுதடைந்தமை காரணமாக இந்திய கடற்பகுதியில் நிர்க்கதிக்குள்ளாகிய வடபகுதி மீனவர்களை இந்திய கடற்படையினர் மீட்டுள்ளனர். வடக்கில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்த மூன்று மீனவர்களே இவ்வாறு இந்திய கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற இந்த மீனவர்கள் நால்வரும் படகு பழுதடைந்ததன் காரணமாக இந்தியாவின் புஷ்பவனம் கடற்பகுதியில் தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் இந்திய கடலோர பாதுகாப்புபடையினரால் அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

மேற்படி மீன்பிடிப் படகின் வெளி இணைப்பு இயந்திரம் பழுதடைந்த நிலையில் படகு திசைமாறி இந்திய புஷ்பவனம் கடற்பகுதியில் கரை ஒதுங்கியுள்ளது.

மீனவர்களையும் படகையும் இந்திய கடல் பாதுகாப்பு படையினர் தடுத்து வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


Add new comment

Or log in with...