கொரோனா திரிபு 30க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவல்

அதிவேக தொற்றுத் திறன் உடையதாக கருதப்படும் பிரிட்டன் மரபணு மாற்ற கொரோனா வைரஸ், உலகில் 30 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியா, துருக்கி, அயர்லாந்து மற்றும் சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இந்த வைரஸ் பரவல் உறுதியாகியுள்ள நிலையில், வியட்நாமும் அந்தப் பட்டியலில் கடைசியாக சேர்ந்துள்ளது. பிரிட்டனில் இருந்து வந்த பெண்மணி ஒருவருக்கு இந்தத் தொற்று உறுதியானதாக வியட்நாம் அரசு தெரிவித்துள்ளது.

அதே போன்று அமெரிக்காவில் குறைந்தது மூன்று மாநிலங்களில் மரபணு மாற்ற கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த புதிய திரிபு 70 வீதம் வேகமாக பரவுவதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை சீனாவில் முதல் முறை கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இதுவரை நான்கு வகை புதிய கொரோனா வைரஸ் திரிபுகள் உலகெங்கும் வலம்வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...