புதிய கொரோனா வைரஸின் மரபணுவை தனியாகப் பிரித்தெடுத்துள்ள இந்தியா

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், உலகில் முதல் முறையாக புதிய வகை கொரோனா வைரஸின் மரபணுவை தனியாகப் பிரித்தெடுத்துள்ளது. மகாராஷ்டிராவின் புனேவில் உள்ள தேசிய வைராலஜி இன்ஸ்டிடியூட் விஞ்ஞானிகள் இந்த சாதனையைப் படைத்துள்ளனர்.

பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு திரும்பி வந்த கொரோனா நோயாளிகளின் மாதிரிகளில் இருந்து புதிய வகை வைரஸின் மரபணு பிரித்தெடுக்கப்பட்டிருக்கிறது.

பிரிட்டனில் கொரோனா வைரஸின் மர பணு மாறி, புதிய வகை கரோனா வைரஸ் பரவி வருவது கடந்த அக்டோபரில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் 70 சதவீதம் அதிவேகமாக பரவி வருகிறது. பிரிட்டனில் இருந்து ஸ்பெயின், சுவீடன், சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், டென்மார்க், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், சிங்கப்பூர், லெபனான், நைஜீரியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கும் புதிய வகை வைரஸ் பரவியுள்ளது.

இந்தியாவில் இதுவரை 29 பேர் புதிய வகை கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய கரோனா வைரஸின் மரபணு குறித்த ஆராய்ச்சி, உலகம் முழுவதும் தீவிரமடைந்துள்ளது.


Add new comment

Or log in with...