ஐ.கா. உல‌மா க‌ட்சியின் உப‌ த‌விசாள‌ர் பிஷ்ருல் இஸ்ஸ‌தீன் இடைநிறுத்தம் | தினகரன்

ஐ.கா. உல‌மா க‌ட்சியின் உப‌ த‌விசாள‌ர் பிஷ்ருல் இஸ்ஸ‌தீன் இடைநிறுத்தம்

ஐக்கிய‌ காங்கிர‌ஸ் உல‌மா க‌ட்சியின் உப‌ த‌விசாள‌ரான‌ பிஷ்ருல் இஸ்ஸ‌தீன் அவர‌து ப‌த‌வியில் இருந்து த‌ற்காலிக‌மாக‌ இடைநிறுத்த‌ப்ப‌ட்டுள்ள‌தாக‌ க‌ட்சியின் செய‌லாள‌ர் எம். ஸாஹித் தெரிவித்துள்ளார்.

நேற்று ஸூம் மூல‌ம் ந‌டைபெற்ற‌ உய‌ர் ச‌பை கூட்ட‌த்தின்போதே இம்முடிவு எடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌தாக‌ அவர் தெரிவித்துள்ளார்.

பிஷ்ருல் இஸ்ஸ‌தீனின் ந‌ட‌வ‌டிக்கை ச‌ம்ப‌ந்த‌மாக‌ அவ‌ர‌து விள‌க்க‌த்தை கேட்ட‌ பின் மேல‌திக‌ தீர்மான‌ம் எடுக்க‌ப்ப‌டும் என‌வும் அவ‌ர் தெரிவித்தார்.

அண்மையில், ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக, கொவிட்-19 உடல் தகனத்திற்கு ஆதரவாக இடம்பெற்ற கூட்டத்தில் சாய்ந்தமருதைச் சேர்ந்த பிஷ்ருல் இஸ்ஸ‌தீன் கூறிய கருத்துகள் தொடர்பில் சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட, பல்வேறு ஊடகங்களிலும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து, சாய்ந்தமருது - மாளிகைக்காடு பள்ளிவாசல்கள் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து தங்களது கண்டனத்தையும் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...