பாதீடு தோல்வியால் பதவி இழந்த யாழ். மாநகர முதல்வர் பதவிக்கு மீண்டும் ஆர்னோல்ட் போட்டி

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான பாதீடு தோற்கடிக்கப்பட்டதனால், முதல்வர் பதவியை இழந்த இம்மானுவேல் ஆர்னோல்ட், அந்தப் பதவிக்காக மீண்டும் போட்டியிடுவார் என,  இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராசா அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாநகர சபை முதல்வர் பதவிக்கு ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்பும் வகையில் வடமாகாண உள்ளூராட்சி சபை ஆணையாளர் தலைமையில் இன்று தெரிவு இடம்பெறவுள்ளது.

இந்த நிலையிலேயே இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் சார்பில் இம்மானுவேல் ஆர்னோல்ட் முதல்வர் பதவிக்கு போட்டியிடுவார் என்று கட்சியின் தலைவர் அறிவித்துள்ளார். 

யாழ்.விசேட நிருபர்


Add new comment

Or log in with...