நாட்டுக்கு வருதல் பழைய நடைமுறையிலேயே

நாட்டுக்கு வருதல் பழைய நடைமுறையிலேயே-Government to Re-Introduce Conditional Repatriation in the Wake of New Strain of COVID19

- முன் அனுமதி அவசியம்

வெளிவிவகார அமைச்சு மற்றும் சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபையின் முன்அனுமதி பெறும் தற்போதைய நடைமுறையின் கீழ், இலங்கைக்கு விஜயம் செய்யும் அனைத்து பயணிகளையும் நாட்டுக்கு அழைத்து வர அராசங்கம் முடிவு செய்துள்ளது.

சில நாடுகளில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸின் வேகமான பரவல் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயினும், நிலைமைகளை மீளாய்வு செய்த பின்னர், மீளழைத்து வரும் செயற்பாடுகள் தொடர்பிலான மீளமைக்கப்பட்ட ஆலோசனைகள் மீண்டும் வழங்கப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

2020 மார்ச்‌ மாதம்‌ முதல்‌ அறிமுகப்படுத்தப்பட்ட இலங்கைக்கு விஜயம்‌ செய்யும்‌ பயணிகளுக்கான நடைமுறைகள்‌, 2020 டிசம்பர்‌ 26 முதல்‌ மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, வெளிவிவகார அமைச்சு நேற்று அறிவித்திருந்தது.

அதற்கமைய, வெளிவிவகார அமைச்சு மற்றும் சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபையின் முன் அனுமதி இன்றி ஏனைய நடைமுறைகளை பின்பற்றி நாடு திரும்ப முடியும் என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...