- கடந்த சில நாட்களில் 17 பேர் அடையாளம்
நாளை முதல் மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் அனைத்து வீதிகளையும் உள்ளடக்கிய 11 இடங்களில் எழுமாறான ரெபிட் அன்டிஜென் (Rapid Antigen) உடனடி சோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
பொலிஸ் தலைமையகத்தில் இன்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அதற்கமைய, மேல் மாகாணத்தை விட்டு வெளியேறும் இடங்கள் 11 மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகளில் வெளியேறும் இடங்களிலும் ரெபிட் அன்டிஜென் சோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, கடந்த சில நாட்களாக மேல் மாகாணத்தை விட்டு வெளியேறுவோர் தொடர்பில் மேற்கொண்ட Rapid Antigen உடனடி சோதனையின் அடிப்படையில், 17 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக அவர் இதன்போது தெரிவித்தார்.
Add new comment