மேல் மாகாணத்தை விட்டு வெளியேறுவோருக்கு ரெபிட் அன்டிஜென் சோதனை

மேல் மாகாணத்தை விட்டு வெளியேறுவோருக்கு ரெபிட் அன்டிஜென் சோதனை-Rapid Antigen Test for Those Who Leaving From Western Province

மேல் மாகாணத்தை விட்டு வெளியே செல்வோருக்கு, கொரோனா தொடர்பான ரெபிட் அன்டிஜன் பரிசோதனை (Rapid Antigen Test) மேற்கொள்ளப்படும் என, சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதற்கமைய, இன்று (18) முதல் கொழும்பு - கண்டி வீதியில், நிட்டம்புவ, அவிசாவளை - கொழும்பு வீதியில், சாலாவ, கொஸ்கம பகுதிகளிலும், கொழும்பு - சிலாபம் வீதியில் கட்டுநாயக்க பகுதிகள் உள்ளிட்ட மேல் மாகாண எல்லைப் பகுதிகளில் இவ்வாறு சோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மேல் மாகாணத்திலுள்ள மாவட்டங்களில் அதிகளவில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதன் காரணமாக, அதன் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் சுட்டிக் காட்டியுள்ளது.

இதற்கென, நடமாடும் சுகாதாரப் பிரிவு வாகனங்களை ஈடுபடுத்துவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் செயலாளரின் ஆலோசனைக்கமைய, பொலிஸ் திணைக்களத்தின் உதவியுடன், இச்சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என, சுகாதார அமைச்சின் ஆய்வுகூட சேவைகள் தொடர்பான பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் சுதத் கே. தர்மரத்ன தெரிவித்தார்.

Rapid Antigen Test: கொரோனா தொற்று உள்ளதா என கண்டறியும் விரைவாக பதிலளிக்க கூடிய பரிசோதனை


Add new comment

Or log in with...