சபரிமலையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று

கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்கள், பணியாற்றும் ஆலய சபை ஊழியர்களிடையே கொரோனா பரவல் அதிகரித்துள்ளதையடுத்து, வரும் 26-ம் தேதி முதல் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை மாற்ற கேரள அரசு முடிவு செய்துள்ளது.

இதன்படி சபரிமலை கோயிலில் பணியாற்றும் ஆலய சபை ஊழியர்கள், தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் வரும் 26-ம் தேதி முதல் கட்டாயமாக ஆர்டி-பிசிஆர் பரிசோதனை நடத்தப்படும் என கேரள சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

கேரளாவில் கொரோனா வைரஸ் பரவல் 2-ம் கட்ட அலை வீசி வருகிறது. அங்கு நாள்தோறு 3 ஆயிரத்துக்கும் குறையாமல் புதிதாக தொற்றுக்கு ஆளாகின்றனர். ஏறக்குறைய 60 ஆயிரம் பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

இந்த சூழலில் சபரிமலை ஐயப்பன் கோயில் மகரவிளக்கு சீசனுக்காக கோயில் திறக்கப்பட்டது.பக்தர்கள் கடும் கட்டுப்பாடுகளுடன்தான் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பக்தர்கள் கண்டிப்பாக கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும், கொரோனா பரிசோதனை செய்த சான்றிதழுடன் வரவேண்டும் எனக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் அங்கு பரவல் அதிகரித்துள்ளது. ஆலய சபை அதிகாரிகள் தரப்பி்ல் கூறுகையில்,

“மண்டலபூஜை, மகர விளக்கு சீசனுக்காக சபரிமலை திறக்கப்பட்டதில் இருந்து, இதுவரை சபரிமலையில் மட்டும் 51 பக்தர்கள், 245 ஆலய சபை ஊழியர்கள் என 299 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருவதால், ஏற்கெனவே நடைமுறையில் இருந்த பாதுகாப்பு வழிமுறைகளை மாற்ற சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.


Add new comment

Or log in with...