சர்ச்சைக்குரிய தேசியப் பட்டியல் அத்துரெலியே ரத்தன தேரருக்கு

சர்ச்சைக்குரிய தேசியப் பட்டியல் அத்துரெலியே ரத்தன தேரருக்கு-Athuraliye Rathana Thero Appointed as the National List MP for Our Power of People Party-Ape Jana Bala Pakshaya

- அதி விசேட வர்த்தமானி வெளியீடு

கடந்த பொதுத் தேர்தலில் 'அபே ஜனபல பக்‌ஷய' (எமது மக்கள் கட்சி) கட்சிக்கு கிடைத்த தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்புரிமைக்கு, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரெலியே ரத்தன தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவினால், இது தொடர்பான அறிவிப்பு அடங்கிய அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர்  ஞானசார தேரர் அப்பதவியை கோரி வந்த நிலையில், அக்கட்சியின் செயலாளர், வேதினிகம விமலதிஸ்ஸ தேரர் அப்பதவியை கோரி எழுத்து மூலம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்திருந்தார்.

இந்நிலையில், அக்கட்சியின் செயலாளர் காணாமல் போயிருந்த நிலையில், அவரைத் தேடி வருவதாக, ஞானசார தேரர் தெரிவித்திருந்ததோடு, ஆளும் கட்சி அமைச்சர்கள் ஒரு சிலர் இவ்விடயத்தில் தலையீடு செய்வதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார்.

அந்த வகையில் பல மாதங்களாக சர்ச்சையில் இழுபறியில் இருந்து வந்த, அபே ஜனபல பக்‌ஷய கட்சியின் தேசியப் பட்டியல் பதவி, தற்போது புதிதாக நியமிக்கப்பட்ட, தேர்தல்கள் ஆணைக்குழுவினால், அக்கட்சியின் தலைவரான, அத்துரெலியே ரத்தன தேரருக்கு வழங்கப்பட்டுள்ளது.

PDF File: 

Add new comment

Or log in with...